Pithru Dosham

ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும்.

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகமே, பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்த பின்பு தான் தன்னுடைய வேலையை தொடங்கும்.

இல்லாவிட்டால் ஒருவருக்கு ஒன்பது ராசிகளும் உச்சம் பெற்று முதல்வராக ஆகும் ஜாதகமாக இருந்தாலும் கூட, அனைத்து ராசிகளும் சைலண்ட் மோடிலேயே இருக்கும். எனவே, பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அந்த தோஷத்தை போக்க வேண்டியது அவசியமாகும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *