Thirupathy 23 rd dharshan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இன்று வரும் பக்தர்களுக்கு 23-ஆம் தேதியே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களுக்கு  திருப்பதி அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இரண்டு இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த கவுண்ட்டர்களில் 22ம் தேதி வரையிலான தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

எனவே இன்று வரக்கூடிய பக்தர்களுக்கு 23ஆம் தேதிக்காண தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் 24 ஞாயிற்றுக்கிழமை , 26 குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்கள் வருவதால் மேலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *