Iyappan mahar jothi darisanam

சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்துள்ளனர். 

 கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெற்றது. முன்னதாக பந்தளம் பகுதியில் இருந்து திருவாபரண பவனி, மாலை சரங்குத்தி வந்து சேர்ந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. 

பின்னர் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது. 

இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வணங்கினர். மாலை 6.40 மணியளவில் மகர ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு  3 முறை காட்சி தந்தார். 

பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *