Bodi Subramaniya swamy

போடியில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிவபெருமான் உலகத்திற்கு படி அளந்த திருநாளை முன்னிட்டு பக்தர்களுக்கு படி அரிசிபிரசாதமாக வழங்கப்பட்டது.

போடியில் பாண்டிய மன்னர்களால் கட்ட பட்ட அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது இவ்வாண்டு இத்தலத்தில் சிவபெருமான் உலகத்திற்கு படியளந்த திரு நாளை முன்னிட்டு 18 வகையான சிறப்பு பூஜை நடைபெற்றது அண்டர நிறைய அரிசி வைத்து சிறப்பு பூஜை செய்த பின் -பக்தர்களுக்கு படி அரிசி பிரசாதமாக வழங்கினர்.

இன்று மார்கழி அஷ்டமி திதி அன்று உலக லில் – வாழும் அனைத்து ஜீவராசிகள் பசி பட்டினியின்றி வாழ வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் இத்தலத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

அரிசியை பெற்ற பக்தர்கள் வீட்டில் உள்ள அரிசி பாத்திரத்தில் போட்டால் அனைவருக்கும் பசி பட்டினி இன்றி வாழலாம் என்பது ஜதீகம் இதனால் பக்தர்கள் நீண்ட வரிசை வில் நின்று அரிசி பெற்று சென்றனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *