Anjaneyar avadaritha thiruthalam

திருப்பதி   ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் உள்ளன. எனவே தான் சேஷாசலம் மலைத்தொடரில் இருக்கும் இந்த மலைப்பகுதிக்கு ஏழுமலை என்ற பெயர் வர காரணம். ஏழு மலைகளைக் கொண்ட இந்தப் பகுதியில் மஹாவிஷ்ணுவின் கலியுக அவதாரமாக வெங்கடேஸ்வரா சுவாமி எழுந்தருளி இருப்பதால் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயரும் பக்தர்களால்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள  அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி நீண்ட காலம் கடுமையாக தவமிருந்து திருமலையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கையில் நீராடி அதன் பயனாக ஜபாலி என்னும் இடத்தில் ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.

எனவே திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் ஜபாலியில் அஞ்சனாத்திரி மலையில் அவதரித்தாரா என்று ஆய்வு மேற்கொள்ள தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோயில் ஆகம ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஆஞ்சனாத்திரி மலையில் பக்தர்கள் பாத யாத்திரை செல்லும் பகுதியில் மிகப்பெரிய ஆஞ்சனேயர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றுள்ள நிலையில் ஜபாலி தீர்த்ததில் ஜபாலி ஆஞ்சனேயர் கோயிலும் உள்ளது. எனவே இந்த ஆய்வின் மூலம் ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று உறுதி செய்யப்பட்டால்  திருமலையின் பெருமை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆஞ்சநேயரின் அவதார திருத்தலம் மலையிலுள்ள அஞ்சனாத்திரி மலையே என்று உறுதி செய்யப்படும் நிலையில் அங்கு ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான கோவிலை தேவஸ்தானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

ராமபிரானுக்கு நீண்டகால தடைகளைத் தாண்டி அவருடைய அவதார திருத்தலமான அயோத்தியில் பிரம்மாண்டமான கோயில் கட்ட பணிகள் துவங்கி இருப்பதை தொடர்ந்து, ராமரின் பாசத்துக்குறிய ஆஞ்சனேயருக்கும்  இதனால் அவதார திருத்தலத்தில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *