Tihrupathy VIP Dharisanam

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாழடைந்த கோவில்கள் புனரமைக்கவும், தூப தீப நைவேத்யங்கள் சமர்ப்பிக்கவும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ரூபாய் 10,000 நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ரூபாய் 500 கட்டணத்தில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த பத்து நாட்களுக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

அவ்வாறு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கு 10 நாட்களுக்கு 18 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்குவதோடு வைகுண்ட ஏகாதசிக்கான விஐபி தரிசன டிக்கெட்டுக்கு மேலும் கூடுதலாக 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *