Tirupathy vaikunda egadasi ticket

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காண தரிசன இன்று காலை 6.30 மணி முதல் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு  25 முதல் ஜனவரி 3 வரை தரிசனத்திற்கு செல்வதற்கு இன்று  காலை 6.30 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு தினங்கள் மட்டும் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பத்து நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிப்பதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்  இன்று காலை 6.30 மணி முதல் பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான www.tirupatibalaji.ap.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *