Thiruchanoor padmavathi thayar

திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தில் 3-ம் நாளான இன்று முத்துப் பந்தல் வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று கோயில் வளாகத்தில் உள்ள வாகன மண்டபத்தில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடியும், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முத்துப்பந்தல் வாகனத்தில்  கிருஷ்ணர் அலங்காரத்தில்  பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். 

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *