Sabari Malai Nadai Thiruappu

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக  பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. நாளை திறக்கப்படும் சபரிமலை நடை, ஜூன் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட உள்ளது.

இந்த காலகட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நித்திய கால பூஜைகள் ஐயப்பனுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தினசரி காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கவும், ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படவும் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவலை தடுக்கும்விதாமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 

அதேபோல, 19 ஆம் தேதி துவங்கி 28ம் தேதிவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *