Selvam Athikarikka enna seiya vendum

செல்வம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
பொதுவாக ஒவ்வொருவரது  வாழ்விலும் செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். எனவே நம் வீட்டில் என்றும் செல்வம் செழிக்க லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் ஜபித்து வர அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இந்த மந்திரத்தை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.
அதேபோல் நம் வீடு லக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருக்க வேண்டும் என்றால் மல்லிகை பூவை சுவாமி படத்திற்கும், கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.
மல்லிகை, லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான பூ. அதேபோல் பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *