Kayathri Manthiram Solvathal Erpadum nanmaikal

காயத்ரி மந்திரம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்
நவகிரகங்களில் ஆதிக்கம் செலுத்தும் புதன் பகவானுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை புதன் கிழமைகளில் ஜெபித்து வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும்.
அத்துடன் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும்.
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் கோயில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் வீட்டிலோ நல்லெண்ணெய் தீபம், ஏற்றி சிறிது பச்சைப் பயிர்களை நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 108 முறை மந்திர உரு ஜெபிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்துவந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கி கல்வியும் அறிவும் சிறந்து விளங்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *