muthumariamman thiruvizha

காரைக்குடி  முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் கலந்து கொண்டு ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் மாசி – பங்குனி பால்குட திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து பக்தர்கள் முத்தாளம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிமீ தூரம் பால் குடம் ,அக்கினிசட்டி அலகுகுத்துதல், உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற்றி வந்தனர் ஒன்பதாம் நாளான இன்று கோவில் கரகம், முளைப்பாரி, எடுத்து வந்து , தீச்சட்டி,பால்குடம்  உள்ளிட்ட வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

10 ஆம் நாளான இன்று  அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *