Nellai Peratchu selvi koyil

நெல்லை பேராற்று செல்வி கோயில்

 பல்லாண்டுகளுக்கு முன்பு நெல்லை பகுதி ஒன்றில் வசித்த ஏழை பக்தர் ஒருவர்அம்பாளை தன் விருப்ப தெய்வமாக வழிபட்டார்அவருக்கு அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபட வேண்டுமென விருப்பம்ஆனால் கோயில் கட்டுமளவிற்கு அவரிடம் வசதி இல்லைஎனவேஅம்பாள் சிலையாவது பிரதிட்டை செய்ய வேண்டுமென நினைத்தார்.

 ஒருநாள் இரவில் அவரது கனவில் அம்பாள் தோன்றினாள். தாமிரபரணி நதிக்கரையில் மூன்று அத்திமரங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தின் அருகில் ஆழமான பகுதி இருப்பதாக சுட்டிக்காட்டிஅவ்விடத்தில் தான் இருப்பதாக கூறினாள்மறுநாள் அவர்அந்த இடத்திற்கு சென்று வலையை வீசினார்அப்போதுஅம்பாள் விக்கிரகம் அவருக்கு கிடைத்தது.

நதிக்கரையிலேயே சிறு குடிசை அமைத்துஅம்பாளை பிரதிட்டை செய்து வழிபட்டார்இவள் பெரிய ஆற்றில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், “பேராற்று செல்வி” என்ற பெயரும் பெற்றாள்.

விநாயகர் அருகில் நந்திஇக்கோயிலில் அம்பாள் 8 கைகளில் ஆயுதங்களுடன்வடக்கு நோக்கி அருளுகிறாள்வரப்பிரசாதியான இவள் சாந்தமானவள் என்பதால், “சாந்தசொரூப காளி” என்றும் அழைக்கிறார்கள்.

 செவ்வாய்க்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூசைகள் நடக்கிறதுஅம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள சன்னதியில் இரட்டை விநாயகர் இருக்கின்றனர்இவருக்கு இடது புறத்தில் இரண்டு நந்தியும் இருக்கிறதுஇந்த நந்திகள் சிவஅம்சமாக இங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

காசியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன்இந்த தீர்த்தத்தில் நீராடிகுட்டநோய் நீங்கப்பெற்றான்எனவே இத்தீர்த்தத்திற்கு, “குட்டகுறை தீர்த்தம்” என்ற பெயரும் உண்டு.

இவ்விடத்தில் தாமிரபரணி நதிக்கு, “உத்திரவாகினி” என்று பெயர்பொதுவாக வடக்கு நோக்கி செல்லும் நதிகள் புண்ணியமானதாகக் கருதப்படும்எனவேஇங்கு தீர்த்தநீராடி அம்பாளை வழிபடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.

இக்கோயிலுக்கு எதிரே சுடலைமாடன்பேச்சியம்மன் சன்னதி உள்ளது.

 இவர்களும்பிரகாரத்தில் உள்ள சங்கிலிபூதத்தார்நல்லமாடன் இருவரும் பீட வடிவில் இருப்பது விசேஷம்.

தளவாய்பேச்சி தனிசன்னதியில் இருக்கிறாள்வளாகத்தில் இலிங்கேஸ்வரர்சக்கரவிநாயகர் இருக்கின்றனர்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் அக்னிச்சட்டிஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

 நெல்லை நகருக்குள்ளேயே இந்த கோயில் அமைந்திருப்பதால் போய் வருவதற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் உள்ளன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *