thirukoiyilur masi maga theppam

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் மாசிமக தெப்ப திரு விழா. லட்சக்கனகான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு.

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.  பத்து நாட்கள் நடைபெற்றும் இவ்விழாவில் நாள்தோறும் பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வந்தார். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பம் விழா நடைபெற்றது. ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் தேவிர்களுடன் சர்வ அலங்காரத்தில் தெப்ப மண்டபத்திலிருந்து தெப்பத்திற்கு எழுந்தருளினார். பின்னர் திருக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தமிழகம் முழுவதுமிருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  திருக்குளத்தை சுற்றி விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *