Thiruchendur therottam

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தீபாராதனை, உதய மார்த் தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.10 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். 

விநாயகர் தேர் 6.50 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி -தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

 சுவாமி தேர் நிலையம் வந்தடைந்ததும், தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *