Thirupathy Feb dharshan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 21.68 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் 89.07 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19.93 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 21. 68 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  

மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 83.44 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 89.07 கோடி ரூபாய் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

மேலும்  82  லட்சத்து 38  ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 7 லட்சத்து 77 ஆயிரத்து பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம்ப்வெயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *