Thai Month Pradhosham

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். பிரதோஷ நாள் அன்று சிவாலயத்துக்கு சென்று சிவ பெருமானை வழிபட்டடால் ஈசனின் அருள் பரிபூரக கிடைக்கும் என்பது ஐதீகம். 

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது சிறந்தது.

குறிப்பாக  தை மாத வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்து வழிபட்டால், வாழ்வில் தடைகள் தகர்ந்து வாழ்வில் வெற்றி கிடைக்கும்.  தை மாத பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் பறந்தோடும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *