Tanjore Koil App

தஞ்சை பெரிய கோயில்  திருக்குடமுழுக்கு முன்னிட்டு  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  'நம்ம தஞ்சை' என்னும் ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப் பட்டுள்ளது.

 'நம்ம தஞ்சை' செயலி மூலம் தஞ்சை மாவட்டத்தை பற்றியும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும் அரசினால்   மக்களுக்கு வழங்கப்படும் பிற சேவைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்

 தஞ்சை பெரியகோயில்  திருக்குடமுழுக்கு சிறப்பு பதிப்பும் இதனுடன் பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய கோயில் வரலாற்றைப் பற்றியும் பெரிய கோயிலின் கட்டட அமைப்பு  அதனுள் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்கள் கல்வெட்டுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

திருகுடமுழுக்கு நிகழ்ச்சிநிரல் பற்றியும்  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பற்றியும்   அறிந்து கொள்ளலாம்

 ப்ளே ஸ்டோரில் பகிரப்பட்டுள்ள  'நம்ம தஞ்சை' செயலியை  பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து  பயன்பெறுமாறு தஞ்சை மாவட்ட  ஆட்சியர் திரு.ம. கோவிந்த ராவ் ஐஏஎஸ் அவர்கள்   தெரிவித்துள்ளார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *