Amman Alangaram

சென்னை அய்யப்பன்தாங்கலில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும்  ஓம் காளி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் உள்ள ஓம் காளி அம்மன் ஆலயத்தில் உலக நன்மை மற்றும் அமைதிக்காக சிறப்பு வழிபாடுகளுடன், பூஜைகள் நடைபெற்றன .விழாவை முன்னிட்டு ஆலயத்தின் சாமியார் ஓம் காளி அன்பரசு அம்மனுக்கு பால் அபிஷேகம் ,தயிர் அபிஷேகம் ,பன்னீர், இளநீர் ,தேன்,மஞ்சள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து 500 கிலோ மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்ததோடு 20,50,100 ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கறிவிருந்து வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *