Sri Danvantri Arokyapeedam sani homam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற  26.04.2012  முதல்  25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்  –  365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 

தொடர்ந்து 25வது நாளான இன்று 25.01.2020 சனிக்கிழமை சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயுள் விருத்தி பெறவும், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி நீங்கவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ சனிஸ்வரருக்குரிய பூக்கள், திரவியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

மேலும் 26வது நாளான நாளை 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், மாங்கல்ய பாக்கியம் பெறவும், சொந்த வீடு அமையவும், நஷ்டத்தில் நடைபெறும் தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற பல செயல்களில் வளமை பெறவும், மனையில் வீடு கட்டும் தடைகள் நீங்கவும் மற்றும் பல நன்மைகள் பெறவும்  வாஸ்து ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020  வரை  நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *