Saduragiri Swamy Darisanam

ஸ்ரீவில்லிபுத்தூர் தை அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற  சதுரகிரி சுந்தர மகாலிங்கம்  கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து  சாமி தரிசனம் செய்தனர்.
  
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார்  4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த  கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் மாதந்தோறும்  அமாவாசை  மற்றும் பௌர்ணமி நாட்கள்  மட்டுமே பக்தர்கள்  கோயிலுக்கு செல்ல   வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த கோயிலின் முக்கிய திருவிழாவாக ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக தை அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *