Thirupathy Car Festival

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெண்கள் வடம் பிடித்து இழுக்க தங்கரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று அதிகாலை 12.30 மணிக்கு கோவிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் பெண்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

தொடர்ந்து மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை மற்றும் இரவு அதியாயன உற்சவம் நடைபெற்றது. நாளை வைகுண்ட துவாதசியை ஒட்டி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *