Om Kali Ammanukku Alangaram

சென்னை ஐயப்பன்தாங்களில் ஓம் காளி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது.அதில் 15 அடியில் காளி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இளநீர் மற்றும் கொம்பைக் கொண்டு ஓம் காளி அன்பரசு பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார். 

இதில் 500கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அருள் வாக்கு அளிக்கும் போது உள்ளாட்சி தேர்தலிலும் வருகின்ற தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக அரசு வெற்றி பெறும் என்று அருள் வாக்கு கூறினார்.

சாமி தரிசனம் செய்ய தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் உட்பட ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். இவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *