Dhinamum Deepam Etrungal

தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார். காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். வீடுகளில் பிரச்சினைகள் வராது. புண்ணியமும், ஞானமும் அதிகரிக்கும். 

தீப ஜோதி நமோஸ்துதே

அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆன்ம ஜோதி ரூப

– என இறைவனையும், ஆன்மாவையும் ஜோதி ரூபமாக ஒளி பிரகாசமாக வழிபட்டு வரும் முறையை நம் முன்னோர் பண்டைய காலத்திலிருந்தே வழிமுறை படுத்தி உள்ளனர். எந்த மதத்திலும் ‘தீப ஒளி’ ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல நிகழ்வும் விளக்கு ஏற்றியே தொடங்கப்படுகின்றது. வீட்டிலும் சரி, கோவில்களிலும் சரி காலையும், மாலையும் தீபங்கள் ஏற்றுவது நமது கலாசாரம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *