Sabari Malai Nadai Thirappu

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்கள் நடந்த மண்டல காலம் கடந்த 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. 28, 29, ஆகிய தேதிகளில் நடை சாத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட பூஜைகள் தொடங்கும். ஜனவரி 15 ஆம் தேதி மிகவும் சிறப்பு பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தரிசனம் நடை பெறும்.

ஜனவரி 19 ஆம் தேதியுடன் மண்டல, மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். 20 ஆம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 21ம் தேதி காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *