108 Sumangali poojai

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 14.12.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை 108 சுமங்கலி பூஜை, கர்பரக்ஷாம்பிகை ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு தைலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

தம்பதிகளுக்கு விரைவில் புத்ர பாக்யம் கிடைக்க வேண்டி கர்பரக்ஷாம்பிகை ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உடல் பிணி, மன பிணி நீங்க 16 ஆம் ஆண்டு தைலகாப்பு திருமஞ்சனம் தன்வந்திரி மூலவருக்கு சென்ற மாதம் 28.11.2019 முதல் இன்று 14.12.2019 சனிக்கிழமை நிறைவு பெற்றது. மேலும் மாங்கல்ய பலம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமை வேண்டியும் நடைபெற்ற 108 சுமங்கலி பூஜையில் 108 சுமங்கலிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். 

இதில் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி தைல பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *