danvanthri peedam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிணி தீர்க்கும் தன்வந்திரி பெருமாளுக்கு 16 ஆம் ஆண்டு ஸஹஸ்ர கலசாபிஷேகத்துடன் ஸஹஸ்ரநாம அர்ச்சனை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற உள்ளது.

வாலாஜாபேட்டையில் ஷண்மத பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹாவிஷ்ணு அம்சமாக எழுந்தருளி வழிபடும் பக்தர்களுக்கு அருள்பாவித்து கொண்டிருக்கும் பிணி தீர்க்கும் பெருமாளான ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு கார்த்திகை மாதம் 29ஆம் நாள் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி, பூசம் நக்ஷத்திரத்தில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கோபூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா பூஜைகளுடன் மஹா தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் பல்வேறு ஹோமங்கள் பாஞ்சராத்ர ஆகமப்படியும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருவுளப்படியும் ஸஹஸ்ர (1008) கலசாபிஷேகமும் இதர பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையும் 10 க்கு மேற்பட்ட சைவ, வைணவ ஆச்சாரியர்களை கொண்டு பக்தர்கள் முன்னிலையில் மாபெரும் வைபவமாக நடைபெற பகவத் க்ருபை கூட்டியுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு புண்ணிய நதிகளில் தீர்த்தமாடிய பலன் மற்றும் உடல் ரீதியாவும், மன ரீதியாவும் ஏற்படுகின்ற நோய்களுக்கு நிவாரணம் பெறலாம், சகல விதமான தோஷங்கள், பாபங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள் பாவித்து வரும் தெய்வங்கள்

வைணவம் : வைணவம் சார்ந்த ஸ்ரீ அஷ்டநாக கருடன், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர், ஸ்ரீ சுதர்சனாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசர், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர், ஸ்ரீ கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாச ஐயங்கார் (ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவும்).

சௌரம் : சௌரம் சார்ந்த ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்.

சைவம் : சைவம் சார்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரர், ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ பால்முனீஸ்வரர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர், காலபைரவர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர், ஸ்ரீ அஷ்டதிக்பாலகர்கள், ஸ்ரீ வாஸ்து பகவான், காலசக்கரம், ஸ்ரீ ராகு-கேது மற்றும் 468 சித்தர்கள் (சிவலிங்க சொரூபம்), ஸ்ரீ புத்த பிரான், ஸ்ரீ குருநானக், ஸ்ரீ ரமணர், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சூரிய பாபா, ஸ்ரீ சீரடி தங்க பாபா, ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீ அத்ரிமகரிஷி பாதம், ஸ்ரீ மகாவீரர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ மஹா அவதார் பாபா, ஸ்ரீ அகஸ்த்தியர், ஸ்ரீ வீரபிரம்மங்காரு, ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ சூரிய சந்திரன்.

ஸ்ரீ சாக்தம் : சாக்தம் சார்ந்த ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவி, ஸ்ரீ லட்சுமிகுபேரர், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ பாரதமாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ மாமேரு, ஸ்ரீ வாணிசரஸ்வதி, ஸ்ரீ காயத்ரிதேவி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ அனுசுயாதேவி, நவகன்னிகைகள், ஸ்ரீ வனதுர்கா, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி.

காணாபத்யம் : காணாபத்யம் சார்ந்த ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ விநாயக தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்.

கௌமாரம் : கௌமாரம் சார்ந்த ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ பாலமுருகன். போன்ற ஷண்மத தெய்வங்களுக்கும் திருச்சன்னதிகள் அமைத்து தினசரி யாகங்களும் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்ற தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து மேற்கண்ட யாகங்களிலும் பூஜைகளிலும் அனைவரும் கலந்து கொண்டு மேற்கண்ட தெய்வங்களின் அருள் பெற்று நோயற்ற வாழ்வுடன், குறைவற்ற செல்வத்துடன் கல்வி மேன்மை, வியாபார லாபம், உத்யோக உயர்வு, தொழில் வளர்ச்சி, மழை வளம், விவசாய வளர்ச்சி மற்றும் பதினாறு வகையான ஐஸ்வர்யங்களுடன் சுகானந்த பெருவாழ்வு பெற தன்வந்திரி குடும்பத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *