Puthira bakiyam kidaikka

குழந்தை வரம் இல்லையே என்று பலரும் ஏங்குகின்றனர். திருமணம் முடிந்த தம்பதியர் அடுத்ததாக ஆண்டவனிடம் வேண்டுவது குழந்தை செல்வத்திற்குத்தான். இன்றைக்கு பலருக்கும் குழந்தை வரம் கிடைப்பது தாமதமாகிறது.

குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் அத்தனை எளிதாகக் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் சிலருக்குக் கிடைக்காமலே போய், அவர்களது வாழ்க்கை பெரும் போராட்டமாகவே மாறிவிடுகிறது. பிள்ளை பாக்கியம் இல்லாத காரணத்தால் சிலரது திருமணம் ரத்தாகிவிடுகிறது.

குழந்தை வரத்தை கடவுளிடம் கேட்ட காலம் போய் மருத்துவர்களிடம் லட்சக்கணக்கில் செலவு செய்து பெற வேண்டிய நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டிருக்கின்றனர். புத்திர தோஷங்களினாலும் பிள்ளைகள் கிடைப்பது தாமாகும். புத்திர தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும்.

தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகி இருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *