Dhanusu Rasi November Rasi Palan

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எந்த சூழ்நிலையிலும் நேர்மையுடன் இயங்கும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடையவர். இந்த மாதம்  ராசிநாதன் குரு ராசியில் இருக்கிறார். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். செவ்வாய் ராசியில் பயணிப்பதால் மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேலிடத்திலிருந்து முக்கியமான காரியம் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும். 

குடும்பத்தில் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களிடம் மரியாதை அதிகரிக்கும்.

பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு கிரகசூழ்நிலை சாதகமாக இல்லாததால் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும்.  செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். 

மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12 
 

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
Mobile/WhatsApp: +91 7845119542

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *