Dewali Special Mysorepa

தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு எளிமையான முறையில் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்…

நெய் மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 3 கப்,
தண்ணீர் – 1 கப்.

நெய் மைசூர் பாகு செய்யும் வழிமுறைகள்….. 
கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.

அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும்.

அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *