Navarathirikku Purappata Silaigal

திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் நவராத்திரி திருவிழாவுக்காக குமரி மாவட்டத்தில் பத்மநாப அரண்மனையில் இருந்து சாமி விக்ரகங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

கேரளா தொல்லியியல் துறை அமைச்சர்  கடனப்பள்ளி ராமசந்திரன், தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளா தொல்லியியல் துறை இயக்குனர் சோனா, கோவளம் எம்எல்ஏ வின்சென்ட், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், திருவனந்தபுரம் எஸ்பி அசோகன், பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, குமரி எஸ்பி ஸ்ரீநாத் உட்பட பொதுமக்கள் என ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முக்கிய நிகழ்வாக தினம்தோறும் பூஜைகள் நடந்தப்படும் மன்னர் உடைவாழ் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பூஜையில் இருந்த வாளை கேரளா தொல்லியியல் துறை இயக்குனர் சோனா குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தார். 

இதை தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு சாமி விக்ரகங்கள் பல்லாக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி சென்றது. அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

சாமி விக்ரகங்கள் ஊர்வலத்தில் கேரளா மற்றும் குமரி போலீசார் 500- க்கும் மேற்பட்டோர் இணைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாமி விக்ரகங்கள் 28-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதில் சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் கோட்டைக்கம், நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜையில் வைக்கப்படுகிறது.

பின்னர் சாமி விக்ரகங்கள் நவராத்திரி பூஜையில் 10 நாட்கள் பங்கேற்று பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாள் நல்லிருப்பை அடுத்து 10-ம் தேதி புறப்பட்டு 12-ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *