alhokha fm news

நம்மை இறைவனுக்கு மிக அருகில் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் இசைக்கு உண்டு. அதனால் தான் இசையோடு பாடப்படும் திருவாசகமும், திருப்பாவையும் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. பக்திப் பாடல்களை கேட்கும்போது உள்ளுக்குள் ஏதோ உருகி மனம் லேசாகிவிடுகிறது.

இனி நீங்கள் பக்திப் பாடல்களையும், நல்ல உபன்யாசங்களையும் கேட்க யூ ட்யூபில் கீ வேர்ட் போட்டு தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. உங்களுக்காகவே வந்திருக்கிறது, பக்திக்கான ஒரு பிரத்யேக பண்பலை ஒலிபரப்பு சேனல். அதுவும் மொபைல் ஆப் வடிவில். 

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சித்தாந்தத்தோடு உலகளாவிய அளவில் இந்தியாவின் ஆன்மிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான பண்பலையாக அலோகா FM  (Alhokha fm) தொடங்கப்பட்டிருக்கிறது. Alhokha என்ற சொல் இறைவனை குறிக்கும். இதை 'அலோகா' என்றே உச்சரிக்க வேண்டும்.

பக்தி  பாடல்கள், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள் என உங்கள் ஒவ்வொரு நாளையும்  அர்த்தமுள்ளதாக்கும் அனேக விஷயங்களோடு 24 மணி நேரமும் இயங்குகிறது.

சுயமுன்னேற்ற பயிற்சி சிந்தனைகள், வகுப்புகள்,  ஆன்மீக சாதனா முறைகள், ஆன்மிக இரகசியங்கள் அதன் அறிவியல் விளக்கங்கள்,  பண்பாடு சார்ந்த அறிவுறுத்தல்கள் போன்றவை alhokha fm-ல் உண்டு.

எளிமையான  அதேநேரம் சக்திமிக்க யோக முறைகளின் அறிமுகத்தை alhokha fm-ல் நீங்கள் அறியலாம். வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்குகின்றனர். சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் மகாத்மாக்கள் மற்றும்  உயர்ந்த மாமனிதர்களின் சீரிய சிந்தனைகள் alhokha FMஐ அலங்கரிக்கின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *