Kalachakra Poojai

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நக்ஷத்திர தோஷங்கள் ஆகல 27 நக்ஷத்திர ஹோமத்துடன் காலசக்கிர பூஜை நடைபெற உள்ளது.

நமது வாழ்வில் நக்ஷத்திரங்கள் மற்றும் நவகிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. வேத ஜோதிடப்படி நவம் என்றால் ஒன்பது என்றும் கிரஹ என்றால் கோள்கள் என்றும் பொருள். ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் கிரக நிலைகள் மற்றும் நக்ஷத்திரம் தான் அவருடைய வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்தம் செயல் மற்றும் விளைவுகளை நிர்ணயிக்கின்றன என்பது ஜோதிட விதியாகும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நவகோள்களின் மற்றும் நக்ஷத்திரங்களின் அனுக்கிரகத்தைப் பெற நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம் மிகவும் முக்கியமானது. அவரவரின் கர்ம வினையைப் பொறுத்துத்தான் அவரது ஜாதகத்தில் 9 கிரகங்களின் நிலை, நக்ஷத்திரங்களின் பலம் அமையும். அதன் அடிப்படையில் தான் வெற்றி, தோல்வி காணப்படும். சில சமயங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். ஒன்பது கிரகங்கள், 27 நக்ஷத்திரங்களை திருப்தி படுத்தும் விதத்தில் யக்ஞஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் இந்த ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும், வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் இடையூறில்லாத வெற்றிகளை பெற முடியும்.

27 நக்ஷத்திர ஹோமம் – காலசக்கர பூஜை பலன்கள்

மனித பிறவியின் வாழ்வானது 27 நட்சத்திரம், நவக்கிரஹங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அமைகின்றது. நமது பூர்வ புண்ணிய பாவம், முன்னோர்களின் பாவம், சாபம் இவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் திருமணத்தடை, இருதார யோகம், வம்ச விருத்தி குறைபாடு, தொழில் தடை, அடுத்தடுத்து ஏற்படும் கண்டங்களும், விபத்துக்களும், தீராத வியாதி, அற்ப ஆயுள், வாழ்வின் முன்னேற்றத்தடை போன்ற குறைகள் யாவும் நட்சத்திரங்கள், நவக்கிரஹங்கள் வாயிலாகவே ஏற்படுகின்றது.

இவற்றிலிருந்து விடுபட நட்சத்திரங்களையும், நவக்கிரஹங்களையும் வழிபட்டு கெடு பலன்கள் நீங்கி, சுப பலன்கள் பெற மேற்கண்ட யாகம் பலன்தரும். மேலும் தனதான்யம், சௌபாக்யம் பெருகும். கடன் பிரச்சனைகள் நீங்கும். அறிவு, புகழ், பலம் உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நிலம், வீடு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். தொழில் வியாபார அபிவிருத்தி, பணவரவு, செல்வம், செல்வாக்கு பெருகும். வழக்கு வியாஜ்யங்களினால் ஏற்படும் தடைகள் அகலும். சகலவிதமான தோஷங்கள், பாபங்கள், சாபங்கள் நீங்கி வாழ்க்கையில் நலம் பெறலாம். துன்பங்கள் குறையும், தடைகள் விலகும், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி, அதிர்ஷ்டங்கள் மற்றும் நன்மைகள் பெறலாம், நவக்கோள்கள் மற்றும் நக்ஷத்திர அதிதேவதைகளின் அனுக்கிரகம் கிடைக்கும்.

வெற்றிகரமான வாழ்க்கை ஆமையும், மன அழுத்தம் குறையும், செயல்திறன் கூடும், வாழ்க்கையில் வளர்ச்சி, வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி, கல்வியில் வெற்றி, நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு, தொழிலில் முன்னேற்றம், இயற்கை வளம் போன்ற பல்வேறு பலன்களை பெறலாம். இந்த யாகம் 27 நக்ஷத்திர விருட்சங்களுடைய இலைகளையும், 9 நவக்கிரகங்களுக்குரிய விருட்சங்களின் சமித்துகளுடன் நவதானியங்கள், பலவர்ண வஸ்திரங்கள் கொண்டு நடைபெற உள்ளது.

மேற்கண்ட யாகத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலசக்கரமாக அமைத்துள்ள 27 நட்சத்திர, 9 நவரக்கிரக விருட்ஷங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் அனைவரும் இந்த யாக பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *