Drowpathy amman koil kumbabishegam

அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் ஸ்ரீ கிருஷ்ண சகாய பாண்டவ சமேத அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலய புணருத்தாரண மஹா கும்பாபிஷேகம் வெகு விமற்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துக்கொண்டனர். 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கிருஷ்ண சகாய பாண்டவ சமேத அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் புணருத்தாரண செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா ஆலய நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

கடந்த 9 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோபூஜை, கணபதி ஹோமம் போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா இன்று காலை யாகசாலை பூஜைகள், தத்துவார்ச்சனை, அவ்வப்பிரதயாகம் போன்ற பூஜைகளுக்கு பின்னர் புனித நீரை ஊர்வலமாக ஆலயம் சுற்றி வந்து வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழுங்க புனித நீர் கோபுர கலங்களின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதில் கலந்துக்கொண்ட மக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி சாமி தரிசனம் செய்துக்கொண்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருளாசி பெற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *