Neela nira pattadayil Atthi Varadahar

நாளான இன்று வானம் நீலம் நிறம் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அத்தி வரதர்  அருள்பாலித்து வருகிறார் 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 30ம் நாளான இன்று வானம்  நீல நிறம் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இன்று நீண்ட வரிசையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசிக்க காத்திருக்கின்றனர் காலை 4.30 மணிக்கு கோபுர வாயில் திறக்கப்பட்ட பின் தரிசனம் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது என பக்தர்கள் தெரிவித்தனர்

மேலும் வருகிற 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதனால் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்

இதேபோல் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை. டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

1-ந்தேதி அதிகாலை 5 மணியில் இருந்து எப்போதும்போல பக்தர்கள் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் மேலும் 3-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால் அன்று மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அதேபோல் 15-ந்தேதி கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதி இல்லை இதேசமயத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தினங்களில் மேலும் கூடுதலாக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *