Kaaraikaal ammyar

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம்.

கைலாசநாதர் கோயிலில் 3-ஆம் நாளான திங்கள்கிழமை பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் பல்வேறு வகையிலான திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆராதனைகள் செய்யப்பட்டன. 

நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனி ஏந்தியவாறு பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.  

பக்தர்கள் மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பட்டு வஸ்திரம் சாற்றி வழிபாடு நடத்துவர். அப்போது தெருவெங்கும் உள்ள வீடுகள், வணிக கட்டடங்களின் மேல் தளங்களில் இருந்தவாறு சப்பரம் நகர்ந்த பின்னர் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் இறைக்கப்படுகிறது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *