Karaikaal Ammayar mangani thiruvizha

காரைக்காலம்மையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுவாக, பரமசிவன் அடியார் கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தங்க கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தபோது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், மாங்கனிகளை இறைத்து சிவனை வழிபட்டனர்.

திருவிழாவையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் இத்திருவிழாவைக் காண ஏராளமானோர் வந்துள்ளனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *