Thirupathy Ezhumalayan Online ticket

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கோடை விடுமுறை காரணமாக  திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

இலவச தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க முடியாத பக்தர்கள் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று விரைவாக தரிசனம் செய்வது வழக்கம். 

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாத  ரூ 300 காண தரிசன டிக்கெட் , அறைகள் ஆன்லைளில்  9  ஆம் தேதி வெளியீடப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  அக்டோபர்  மாதத்திற்கான ரூபாய் 300 காண சிறப்பு தரிசன டிக்கெட், அறைகள்   9 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக தேவஸ்தானம் கோட்டா வெளியீடு செய்ய உள்ளது. 

எனவே பக்தர்கள் இந்த தகவல் மூலம்  அக்டோபர் மாதம் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்  9  ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதள முகவரி www.ttdsevaonline.com   , தேவஸ்தானம் இ தரிசன கவுண்டர்கள், தபால் நிலையங்களில் ரூ 300 டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *