Thikkuvai problem

சிறு வயதிலிருந்தோ அல்லது திடீரென்றோ திக்கு வாய்ப் பழக்கத்திற்கு  ஆளாவனவர்கள் உண்டு. இதற்கு எளிமையான நிவாரண முறையை சித்தர்கள் அருளியுள்ளார்கள். 

சுத்தமாகத் தயார் செய்த விபூதியில் சிறிது நீர் விட்டுக் குழைத்து அதை உடலில் 36 பட்டைகளாக இட்டுக் கொண்டு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய வேயுறு தோளி பங்கன் என்று தொடங்கும் பதிகத்தை 11 முறை ஓதி வரவும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் 
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

 தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர திக்கு வாய் குணமாகும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *