Thirupathy Ezhumalayan Hundiyal Kanikkai

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் 24. 66 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 100 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு 2018 ஆண்டு ஜூன் மாதம் 24.01 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து  91.81 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். 

இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 24.66 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 100.37 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.13 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு 11.09 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12.88 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியதாக மக்கள் தொடர்பு அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *