Kanchi Kamakodi Special Prathanai

மழை வேண்டியும் உலக நன்மைகாகவும் ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் 64  சிவாச்சாரிய தம்பதிகள்,  சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த மதுரவாயலில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மழை வேண்டியும்,உலக நன்மைகாகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் கணபதி பூஜை,ருத்ர பாராயணம்,வருணஜபம் மற்றும் 64 சிவாச்சாரியர்கள் தங்கள் துணைவியுடன் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜையில் ஈடுபட்டனர்.  

இதனை தொடர்ந்து பைரவர் பூஜையும் நடைபெற்றது.இந்த பூஜைக்காக 26 தலைகள் மற்றும் 48 கரங்கள் கொண்ட சிவன் பார்வதியின் பிரமாண்ட உருவம்  அமைக்கப்பட்டு இருந்தன. பூஜையில் சிவாச்சாரியார்கள் மட்டுமல்லாமல் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *