Nellukadai Mariamman Ther

 நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 3 ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து இக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து நேர்ச்சைக்காக பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி  வேண்டுதலை நிறைவேற்தி வருகின்றனர்.

தொடர்ந்து நெல்லுக் கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரினை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைக்க ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று மாலை நிலைக்கு வந்து சேரும்.  

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்கள் மாவிளக்கு வைத்தும் படையலிட்டும்; பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பிலை காவடி, மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளோடு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *