Siva peruman meedhu Sooriyan

காட்பாடி அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவிலில் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு  நடைபெற்றுள்ளது. 

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 22 ஆம் நாள் முதல் 10 நாட்கள் இத்திருகோவிலில் உள்ள சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். 

அதே போல் இந்தாண்டு பங்குனி உத்திராயனத்தில் பங்குனி மாதம் 22 முதல் சித்திரை  1 வரை  ஏழு நாட்கள் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுகிறது. சிவன் மீது சூரியஒளி படும் இந்த அதிசய நிகழ்வு காலை  ஆறு மணி முதல் 6.30 வரை நடைபெறும். இந்த அதிசய நிகழ்வு  அகவே சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது. 

ஆண்டுக்கு ஒரு முறை ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுவதால் இந்த நிகழ்வை காண மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு எழுபிரவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகின்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *