Maha Saneeswarar Abishega video

புதுச்சேரி அருகே மொரட்டாண்டி மகா சனீஸ்வரர்  கோவிலில் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

 ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெற்றது. இன்று மதியம் ராகு பகவான் கடக் ராசியிலிருந்து  மிதுன ராசிக்கும் , கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். 

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி அருகேயுள்ள  தமிழகப்பகுதியான மொரட்டாண்டி மகா சனீஸ்வரர்  ஆலயத்தில் 14 அடி உயரமுள்ள  உள்ள ராகு , கேது பகவானுக்கு 1008 லிட்டர் பாலபிஷேகம் ,  108 கிலோ சுண்டல் படைத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி , விழுப்புரம் மாவட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து  அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *