Srinivasa Kalyanam

சென்னை ஆன்மீக கண்காட்சியில் சீனிவாச திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

சென்னை அடுத்த வேளச்சேரியில் ஹிந்து ஆன்மிகம்,  சேவை அறக்கட்டளை, பண்புப் பயிற்சி அறக்கட்டளை சார்பில் ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நடைபெற்றது. 

கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்த ஆன்மீக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆன்மிகம், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையில் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  

கண்காட்சியின் இறுதி நாளில் வன விலங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விருக்ஷ வந்தனம்,  நாக வந்தனம் நடைபெற்றன. அதனை தொடர்ந்து  திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுவாமி எழுந்தருளினார்.

இதையடுத்து, அங்குரார்ப்பணம்,  தலசுத்தி,  புண்யாவசனம்,  சங்கல்பம், மாங்கல்ய பூஜை, மாங்கல்ய தாரணம்,  அட்சதை போடும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பதி திருமலை பட்டாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசித்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *