Garuda Sevai Vedio

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை பிரமோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று காலை கருட சேவை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று காலை 5 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோபுர தரிசனமும், தொடர்ந்து கருட வாகனத்தில் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

ஐந்தாம் நாளான நாளை மறுதினம் தை அமாவாசையையொட்டி காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி

சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏழாம் நாளான, 6ம் தேதி காலை தேர் திருவிழாவும், 8ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. 

விழா ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோவில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *