Selvam tharum Sangu Poojai

தினம் தோறும் சங்கு பூஜை செய்தால் செல்வம் சேரும். பிணிகள் விலகும். சங்கை நீரில் மூழ்கி எடுத்து துடைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் சாற்றி சங்கில் தூய நீர் விட்டு இறைவனை பூஜித்து வழிபட வேண்டும். 

இந்த வழிபாடு முடிந்த பின் சிறிது நீரை தலையில் தெளித்துக் கொண்டு, மறு நாள் அந்தச் சங்கு நீரை குடித்துவிட வேண்டும். இந்த சங்கு தீர்த்தம் அருந்துவதால் உங்கள் புகழ் ஓங்கும். சங்கு தீர்த்தத்தால் செய்யப்படும் ஆராதனையானது, பூமா தேவிக்கு மிகுந்த அமைதியை அளிப்பதாக விளங்குகிறது.

இயற்கை சீற்றங்களைக் கூட மாற்றுகிற ஆற்றால் சங்கு ஒலிக்கு உண்டு என்கிறது புராணம். கல்வியும்,செல்வமும், சகல ஐஸ்வர்யமும் பொங்கும், சங்கில் கலைமகளின் கடாட்சியமும், நிறைந்திருக்கிறது. நான் முகனும், கலைமகளும் தம்பதி சகிதமாக அருள் வழங்குகிறார். சங்கிற்கு அருகில் இருக்கும் பொருட்களுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம், பேனா , பென்சில் போன்றவற்றை  வைத்து கல்விக்காவும் தொழிலுக்காகவும் பயன்படுத்தினால் எடுக்கும் முயற்சியில் இனிதே வெற்றி கிடைக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *