Thriuchendur Uthra varushabishegam

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்தர வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. தை உத்திரம் ஸ்ரீபலி மூலவர் பிரதிஷ்டாதின வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூர்த்திகளுக்கும், விமானங்களுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

வருஷாபிஷேகத்தை ஒட்டி காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  3.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 5 மணிக்கு அபிஷேகமும், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றுள்ளது.  

தொடர்ந்து காலை 7 மணிக்கு மகாமண்டபத்தில் தங்ககுடம் கும்ப பூஜை நடந்தது. 8.35 மணிக்கு கோயில் மேல்தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி மற்றும் வள்ளி, தெய்வானை சன்னதி விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *