siradi-saibabavin-ubadesamozhigal

பகவான் சீரடி சாய் மகாராஜ்  தன்னை நினைக்கும் அடியவர்களுக்கு அளவில்லாத அருள் பாலித்து வருகிறார். தனது பக்தர்களை வழி நடத்த பதினோரு உபதேசங்களை நல்கியுள்ளார் பாபா 

 

எவன் ஒருவன் சீரடி மண்ணை மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

இந்த உலகத்தை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.

என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

நீ என்னை அடைந்தால் நான் உன்னை காப்பாற்றுகிறேன்.

நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.

என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது. சாயி மகானின் வார்த்தைகளை வேத வாக்காக நம் வாழ்க்கையில் கடைபிடிக்க என்றென்றும் வாழ்வில் வசந்தம் நிலைக்கும்.

 

ஓம் ஸ்ரீ சாய் ராம் ….

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *