muthu-pandhal-vaganathi-ezhumalayan

திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, நவராத்திரி பிரம்மோற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்வுடன் தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று முத்துப்பந்தல் வாகனத்தில், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி மலையப்பரை தரிசனம் செய்தனர்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் பஜனைகள் பாடிய படியும், மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுவாமி வீதியுலாவில் கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் குழுவின் இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது நான்மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப்பெருக்குடன் முழக்கமிட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *